1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:02 IST)

பேச்சுவார்த்தைக்கு நாங்களும் தயார்: உக்ரைன் அதிபர் அறிவிப்பு!

உக்ரைன் நாட்டின் ராணுவம் திருப்பித் தாக்காமல் இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சமீபத்தில் அறிவித்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு நாங்களும் தயார் என உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். 
 
கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் உலகம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த போரால் ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் பாதிப்புகள் இருந்து வருவதை அடுத்து போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.
 
இந்த நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. இந்திய பிரதமர் மோடியும் போரை நிறுத்த கேட்டுக்கொண்டார் 
இந்த நிலையில் போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அரசின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது இந்த அறிவிப்புக்கு பதில் கூறிய உக்ரைன் அதிபர் நாங்களும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று தெரிவித்துள்ளார்