செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:32 IST)

இந்திய பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கை

இந்திய பிரதமரிடம் பேசியது என்ன என்பது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் உச்ச கட்டத்தை அடைந்து வரும் நிலையில் இந்த போரை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி, ரஷ்யா அதிபர் புதினிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின 
 
இந்த நிலையில் இந்திய மற்றும் ரஷ்ய பிரதமர்கள் பேசியது என்ன என்பது குறித்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளது
 
உக்ரைன்  மீதான தாக்குதல் குறித்து இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விரிவாக விளக்கினார் என்றும் பிரதமர் மோடி இதற்காக நன்றி தெரிவித்தார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
மேலும் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றி மோடி கோரிக்கை விடுக்க அதற்கான அறிவுரைகள் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்ததாக ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது