குண்டு மழை பொழியும் ரஷ்யா! சுரங்க பாதைகளில் மக்கள் அடைக்கலம்!
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியுள்ள நிலையில் உக்ரைன் மக்கள் வீடுகளை விட்டு சுரங்க பாதைகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.
உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வந்த ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் நகரங்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெறும் பகுதிகளில் வீடுகள், குடியிருப்புகளை விட்டு வெளியேறிய மக்கள் ரயில் சுரங்க பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யாவின் இந்த திடீர் போர் முடிவால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன.