செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (10:59 IST)

உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை! – தமிழக அரசு அறிவிப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வந்த ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் நகரங்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கி தவித்து வரும் தமிழர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்கள் உதவி தேவைப்படும் பட்சத்தில் www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவோ அல்லது 044-28515288, 96000 23645, 99402 56444 என்ற எண்களுக்கோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.