1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (16:28 IST)

சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்!

GUJARATH
குஜராத் மாநிலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலுக்கு திருமணம் நடக்காததால் காதல் ஜோடி பலியாகினர். தற்போது அவர்களுக்குச் சிலை அமைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

குஜராத் மாநிலம் தாபியில் வசித்து வந்தவர் கணேஷ், இவர், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சனா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார்.

இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடித்து, இதுகுறித்து வீட்டில் பேசியுள்ளளனர். ஆனால், இதற்கு குடும்பத்தினர் சம்ம்தம் தெரிவிக்காததால், இருவரும் கடந்த ஆக்ஸ்ட் மாதம்  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் தற்கொலை செய்ததற்குக் காரணம் தான் என்று கருதிய குடும்பத்தினர், அவர்களின் சிலைகள் உருவாக்கி அந்தச் சிலைகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென்று தெரிவித்துள்ளனர்.