திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 ஜனவரி 2023 (12:59 IST)

ட்விட்டர் பயனர்கள் பெயர்கள் ஏலம்.. எலான் மஸ்க் அதிரடி திட்டம்

twitter
ட்விட்டர் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ட்விட்டர் பெயர்களை விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உள்ளார் 
 
இந்த நிலையில் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பாக போலி டுவிட்டர் கணக்குகளை முடக்கும் முயற்சிகள் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது ட்விட்டரை பயன்படுத்தி வரும் பயனாளர்களின் பெயர்கள் முழுமையாக அல்லது பகுதியாக விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், பெயர்கள் ஏலம் விடப்ப்போவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva