வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2022 (15:37 IST)

வில்லியம்சன் எந்த இடத்தில் இறங்குவார்? – குஜராத் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா பதில்!

கொச்சியில் ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் நடந்த நிலையில் கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 2 கோடிக்கு எடுத்தது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் அந்த அணியால் கழட்டி விடப்பட்டார். இந்நிலையில் ஏலத்தில் அவர் கலந்துகொண்டார். ஏலத்தின் போது கேன் வில்லியம்சன் பெயர் வாசிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏலத்தொகை உயர்த்தப்படாததால் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் அணி அவரை வாங்கியது. கடந்த ஆண்டில் அவரது ஏல மதிப்பு ரூ.14 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வில்லியம்சன் வருகையால் குஜராத் அணியில் பேட்டிங் ஆர்டர் மாறுமா என்ற கேள்விக்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா பதிலளித்துள்ளார். அதில் “மில்லரும் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். வில்லியம்சன் மூன்றாவது இடத்திலும், ஹர்திக் பாண்ட்யா நான்காவது இடத்திலும் களமிறங்குவார்” எனக் கூறியுள்ளார்.