ஈரானை தாக்க போவதில்லை: சைலண்ட் ஆன ட்ரம்ப்!
ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் தாக்கியதற்கு பதில் தாக்குதல் நடத்த போவதில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈராக் படைத்தளபதி சுலைமானி அமெரிக்க ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறிய ஈரான் ராக்கெட்டுகளை ஏவி ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை அழித்தது. அமெரிக்கா – ஈரான் இடையேயான இந்த மோதல் உலக போரை ஏற்படுத்தி விடுமோ என உலக நாடுகள் கலக்கமடைந்தன. தாக்குதல் குறித்த விவரங்களை இன்று வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் யாரும் பலியாகவில்லை. மீண்டும் ஈரானை தாக்க அமெரிக்கா விரும்பவில்லை. அதே சமயம் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை அனுமதிக்க போவதில்லை” என கூறியுள்ளார். அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பு உலக நாடுகளுக்கு கொஞ்சம் ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.