தொடர்புடைய செய்திகள்
- சட்டவிரோத குடியேறிகளை ஏற்க மறுத்த கொலம்பியா.. ஆத்திரத்தில் டிரம்ப் விதித்த உத்தரவு..!
- மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!
- மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!
- பிறப்பால் குடியுரிமை ரத்து என்ற டிரம்ப் உத்தரவு: தற்காலிக தடை விதித்தது நீதிமன்றம்!
- அவசர அவசரமாக சிசேரியன் செய்யும் அமெரிக்கவாழ் இந்திய தாய்மார்கள்.. டிரம்ப் கெடுபிடி காரணமா?
25 சதவீதம் வரி.. உடனே வழிக்கு வந்த கொலம்பியா.. டிரம்ப் அதிரடியால் மாற்றம்..!
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றபின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த கொலம்பியா நாட்டினரை விமானத்தில் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அந்த விமானங்களை கொலம்பியா ஏற்க மறுத்தது. இதனை அடுத்து, கொலம்பியாவிற்கு 25% வரி விதிக்கப்படும் எனவும், ஒரு வாரத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் கொலம்பியா நாட்டினர்களை ஏற்காவிட்டால், 50% வரி விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தார்.
மேலும், கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும், இது சம்பந்தப்பட்ட விசா ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், கொலம்பியா அதிகாரிகள் அமெரிக்காவுடன் மோதல் போக்கை விரும்பவில்லை என்றும், தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறி, அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட தங்கள் நாட்டு அகதிகளை ஏற்கத் தயார் என அறிக்கை வெளியிட்டனர்.
ஒரு சில மணி நேரத்தில், டிரம்ப் கொலம்பியாவே வழிக்கி கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran
