1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 25 ஜனவரி 2025 (13:38 IST)

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

அமெரிக்காவின் 47வது அதிபராக கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னால் டொனால்ட் பதவியேற்ற நிலையில் அவர் பதவி ஏற்ற முதல் நாளே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது  மெக்சிகோ வளைகுடாவின் பெயரையும், வட அமெரிக்காவில் உள்ள மிக உயரமான மலையின் பெயரையும் அவர் மாற்றி உள்ளார். மெக்சிகோ வளைகுடா பெயரை "அமெரிக்க வளைகுடா" என்று மாற்றியுள்ள டிரம்ப், டனாலி மலையின் பெயரை மெக்கன்லி என்று மாற்றி உள்ளார்.

இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் வில்லியம்ஸ் மெக்கின்லி அவர்களை கௌரவப்படுத்தும் வகையாக அவரது பெயர் டனாலி மலைக்கு சூட்டப்பட்டதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பெயர் மாற்ற நடவடிக்கையால், அமெரிக்காவின் பாரம்பரியம் காக்கப்படும் என்றும், நாட்டின் நாயகர்கள் மற்றும் வரலாற்று சொத்துக்களை இளைய தலைமுறை அறிந்து கொள்ள வழிவகை செய்யும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran