அமெரிக்காவில் ஜனவரி 20-ல் ஆட்சி மாற்றம் நடப்பதற்கு உடன்பட்டார் டிரம்ப்
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றி, அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க டொனால்ட் டிரம்ப் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில், "தேர்தல் முடிவுகளுடன் நான் உடன்படாதபோதும், ஜனவரி 20ஆம் தேதி முறைப்படி ஆட்சி மாற்ற நடவடிக்கை இருக்கும். நான் எப்போதும் தெரிவித்து வந்ததை போல, சட்டப்பூர்வ வாக்குகள் எண்ணப்படும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
மிகச்சிறந்த முதலாவது பதவிக்காலத்தின் முடிவை இந்த நடவடிக்கைகள் பிரதிபலிக்கும் வேளையில், அமெரிக்காவை மிகச்சிறந்ததாக மீண்டும் ஆக்குவதற்கான எங்களுடைய போராட்டம் தொடரும்," என்று டொனால்ட் டிரம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக டிரம்பின் சார்பில் 60க்கும் அதிகமான வழக்குகள் பல்வேறு மாகாணங்களில் தொடரப்பட்டிருந்தன. அவை அனைத்திலும் டிரம்புக்கு தோல்வியே மிஞ்சியது.