வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 21 ஜூன் 2018 (12:06 IST)

அகதிகள் குழந்தைளின் கதறலுக்கு செவி சாய்த்த டிரம்ப்

அகதிகள் குழந்தைளின் கதறலுக்கு செவி சாய்த்த டிரம்ப்
அமெரிக்கா - மெக்சிக்கோ எல்லையில் அத்துமீறி  நுழையும் அகதிகளின் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரிக்கக்கூடாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
மெக்சிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்கு நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து அங்கு எல்லையோரங்களில் உள்ள காப்பகங்களில் அடைத்து வைக்க அதிபர் சமீபத்தில் உத்தரவிட்டார். இதனால் 1995 சிறுவர், சிறுமிகள் அங்குள்ள காப்பகங்களில் அடைக்கப்பட்டனர். 
 
இதற்கு எதிரப்பு தெரிவித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது மனிதநேயமற்ற செயல் எனவும் பலர் தெரிவித்து வந்தனர். இதனால் டிரம்புக்கு எதிராக கண்டன் குரல்கள் கிளம்ப ஆரம்பித்தது.
அகதிகள் குழந்தைளின் கதறலுக்கு செவி சாய்த்த டிரம்ப்
 
இந்நிலையில், அமெரிக்காவில் அத்துமீறி நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து காப்பக்கங்களில் அடைக்க கூடாது என டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் ஏராளமான மக்கள் மக்ழிச்சி அடைந்து வருகின்றனர்.