1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூன் 2018 (21:09 IST)

வர்த்தக போர்: சீனாவை போட்டு தாக்கும் டிரம்ப்!

சீனாவுடன் நிலவும் வர்த்தக போரின் தொடர்ச்சியாக, 200 பில்லியன் டாலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு செய்யப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
 
50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீன பொருட்கள் மீது 25 சதவீதம் வரிவிதிப்பை கடந்த வாரத்தில் டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடியாக 50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 650 அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது இதே போன்ற கூடுதல் வரிவிதிப்பை சீனாவும் அறிவித்தது.
 
மேலும் டிரம்ப், தனது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள சீனா மறுத்தால், இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க பொருட்கள் மீது அறிவித்த புதிய வரிவிதிப்பை சீனா அமல்படுத்தினால் கூடுதல் வரிவிதிப்பை அமல்படுத்தும் என்று அறிக்கை வெளியிட்டார். 
 
இந்நிலையில், மீண்டும் 200 பில்லியன் டாலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.