1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2024 (08:20 IST)

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடன் மற்றும் டிரம்ப் நேரடி விவாதம்.!

அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில் 
தேர்தலுக்கு முன்னதாக பைடன் மற்றும் டிரம்ப் நேரடி விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த  விவாத நிகழ்ச்சியை சி.என்.என். தொலைக்காட்சி தொகுத்து வழங்கி வருகிறது.
 
விவாதத்தில் கருக்கலைப்பு விவகாரம் தொடர்பான வாதங்கள் சூடுபிடித்தன என்றும், ஆப்கானிலிருந்து அமெரிக்க படை வெளியேறியதற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்தார் என்றும் தெரிகிறது. மேலும் பணவீக்கம் குறித்து அதிபர் பைடனை டிரம்ப் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இந்த விவாதங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது
 
இதனை அடுத்து அதிபர் பைடன் அடுத்து பேசுவார் என்றும் அவர் டிரம்ப் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து காரசாரமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இருவரின் பேச்சில் யார் பேச்சு அமெரிக்க மக்களை கவர்கிறதோ அவர்கள் தான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது நேரடி விவாதம் தொடங்கிய நிலையில் அடுத்த கட்டமாக தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் என்றும் அமெரிக்கா மக்கள் தங்கள் அடுத்த அதிபராக யாரை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Siva