திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 24 ஜூன் 2024 (07:29 IST)

அமெரிக்காவை பந்தாடிய இங்கிலாந்து: 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

உலக கோப்பை 20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் 8 போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையே நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக 20 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

 இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 18.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில் 116 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்தது. இதனை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இன்று இரவு 8 மணிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva