செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (14:16 IST)

”ஓநாய்” சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்..

நாளை வரவிருக்கும் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திர கிரகணம் என பெயர் வைத்துள்ள நிலையில் இதனை வெறும் கண்களுடன் பார்த்து ரசிக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது

சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி கடக்கும் போது நடக்கும் நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். இது நிகழும்போது சூரியனின் ஒளி மங்கும். அதே போல் நிலவு பூமியால் மறைக்கப்படுவதால் நிலவின் ஒளியும் மங்கும்.

இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை (ஜனவரி 10) நிகழ உள்ளது. இதற்கு Wolf lunar eclipse, அதாவது ஓநாய் சந்திர கிரகணம் என நாசா பெயரிட்டுள்ளது. இந்த சந்திர கிரகணம் நாளை இரவு 10.37 க்கு தொடங்கி மறு நாள் (ஜனவரி 11) அதிகாலை 2.42 வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேகமூட்டம் இல்லை என்றால் இதனை வெறும் கண்களால் பார்த்து ரசிக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த சந்திர கிரகணம் ஆசியா, ஐரோப்பா, ஆஃப்ரிக்கா போன்ற நாடுகளிலும் பார்த்து ரசிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சந்திர கிரகணம் நிகழும்போது சாப்பிடுவது, உறங்குவது, வெளியே செல்வது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடலாம் எனவும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.