செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 7 ஜனவரி 2020 (16:06 IST)

பாட்டிலை உடைத்து சரக்கடித்த குடிகார பன்றிகள்..

சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மூன்று பன்றிகள் மோப்பம் பிடித்து மது அருந்திய விநோத சம்பவம் நடந்துள்ளது

ரஷியாவின் டையுமான் நகரத்தில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திடீரென் மூன்று பன்றிகள் புகுந்தன. பன்றிகளை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது சூப்பர் மார்க்கெட்டில் ஒவ்வொரு அடுக்காக சென்ற பன்றிகள், மது பாட்டில் வைக்கப்பட்டிருக்கும் அடுக்கின் அருகே சரியாக சென்று அங்கிருந்த மது பாட்டில்களை கீழே போட்டு உடைத்து மதுவை குடித்து தீர்த்தது. இச்சம்பவத்தை அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.