புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (16:11 IST)

தியானம் செய்யும் புத்த துறவி; டிஸ்டர்ப் செய்யும் பூனை.. வைரல் வீடியோ

தியானம் செய்துகொண்டிருந்த புத்த துறவியின் மடியில் பூனை ஒன்று இங்கும் அங்குமாக சேட்டை செய்து கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்து நாட்டின் வாட் உடாம்ரங்ஸ்கி என்னும் புத்த கோவிலில், லாங் பி கோம்ரிகிட் என்று அழைக்கப்படும் 25 வயது புத்த துறவி ஒருவர் அமர்ந்தபடி தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பூனை, அந்த புத்த துறவியின் மடியில் ஏறி சேட்டை செய்தபடி இருந்தது.

தொடர்ந்து அப்பூனை இவ்வாறு செய்து கொண்டு இருந்ததால்,  தன்னுடைய தியான நிலையிலிருந்து வெளி வந்த துறவி பூனையை தடவி கொடுத்தபடியே இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.