வேலைநீக்கம் செய்யும் முன்னணி நிறுவனங்கள்.. டிக்டாக் மட்டும் செய்தது என்ன தெரியுமா?
உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வேலை நீக்கம் செய்து வரும் நிலையில் டிக் டாக் நிறுவனம் மட்டும் 3,000 ஊழியர்களை வேலையில் பணியமர்த்த இருப்பதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன
பொருளாதார மந்தநிலை பணவீக்கம் மற்றும் அதிக செலவுகள் காரணமாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்பட்டதாக காரணங்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் இந்நிறுவனம் 3,000 ஊழியர்களை பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் பெரும்பாலான அமெரிக்க ஊழியர்களை வேலையில் அமர்த்த டிக்டாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் முன்னணி நிறுவனங்களில் வேலை பார்த்த ஊழியர்கள் தற்போது பிரச்சனையில் இருக்கும் நிலையில் அவர்களை நாங்கள் வேலைக்கு சேர்ப்போம் என்று டிக்டாக் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.
Edited by Siva