வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (16:36 IST)

இன்று நடைப்பெறும் இந்த ஆண்டின் முழு சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் முழு சூரிய கிரகணம் இன்று நடைப்பெறுகிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது கிரகணம் எனும் அரிய நிகழ்வு வானில் நடைபெறுகிறது. சூரிய கிரகணம் என்பது, சூரியனின் ஒளிக்கதிர்களை சந்திரன் மறைக்கும் அரிய  நிகழ்வே ஆகும்.
இந்த நிகழ்வு சிலி, அர்ஜென்டினா மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் அருகிலுள்ள பகுதிகளில் தெளிவாகக் காணமுடியும். இந்தியாவில் இந்த முறை சூரிய சூரிய கிரகணத்தை மக்கள் பார்க்க முடியாது. இதன் தாக்கம் அனைத்து இடங்களிலும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
இன்று நிகழம் சூரிய கிரகணம் அமெரிக்க நேரத்தின்படி 12.55 மதியம் நிகழும் என்றும், இந்திய நேரத்தின்படி இரவு 10.25 மணிக்கும் நிகழும். இந்த முழு சூரிய கிரகணம், நான்கு நிமிடங்கள் 33 வினாடிகள் வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் இந்த சூரிய  கிரகணத்தைப் பார்க்க இயலாது. இருப்பினும் ஆன்லைன் நேரலையின் மூலம் மக்கள் இதனை காணலாம்.
 
நேரலையில் சூரிய கிரகணம் காண, www.exploratorium.edu, அதேபோல் உங்கள் போனில் நேரலையைத் தடை இல்லாமல்  பார்ப்பதற்குப் பிரத்தியேக மொபைல் ஆப் செயலிகளும் உள்ளது.