வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 1 ஜூலை 2019 (13:34 IST)

கேஸ் சிலிண்டர் விலைக் குறைப்பு – கச்சா எண்ணெய் விலை சரிவால் மாற்றம் !

இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து மாறிவருகிறது. இதையடுத்து இன்று மீண்டும் கேஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் சமையல் எரிவாயுவின் விலை அவ்வப்போது மாறி வருகிறது. இதில் கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்தில் சென்ற சமையல் எரிவாயு விலை இன்று 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் படி மானியமில்லா சிலிண்டரின் விலை 100 ரூபாயும் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலையில் 3.02 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் படி சென்னையில் மானியமில்லா சிலிண்டர் ரூ.652.5க்கும்m மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் ரூ.482.23 க்கும் விற்கப்படுகிறது.