ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஜூலை 2024 (08:43 IST)

உலகத்தின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்! இந்த நாடுதான் முதலிடம்! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணிக்க சொந்த நாட்டின் பாஸ்போர்ட் அவசியமானதாக உள்ள நிலையில் எந்த நாட்டின் பாஸ்போர்ட் அதிக அதிகாரங்களை உடையது என்ற ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.



உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் குறித்து ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் என்ற அமைப்பு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இதில் எந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுக்கு எந்தெந்த நாடுகளில் சிறப்பு அதிகாரங்கள், சலுகைகள் உள்ளது என்பதை வைத்து தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் முதல் இடத்தில் சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட் உள்ளது. தொழில் வள நாடான சிங்கப்பூரிலிருந்து உலகில் உள்ள 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். அடுத்து இரண்டாவது இடத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய 5 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

இந்த தரவரிசை பட்டியலில் வல்லரசு நாடான அமெரிக்கா 8வது இடத்தில்தான் உள்ளது. அமெரிக்க பாஸ்போர்ட் மூலம் 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். இந்த பட்டியலில் இந்தியா 82வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலமாக உலகில் உள்ள 58 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.

Edit by Prasanth.K