அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்துக்கணிப்பில் முந்திய கமலா ஹாரிஸ்.. டிரம்ப் தரப்பு அதிர்ச்சி..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் இருவரும் மோதுவார்கள் என்ற நிலையில் டொனால்ட் டிரம்ப் மிக எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென காட்சிகள் மாறி ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகிய நிலையில் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பிரபல நிறுவனம் சமீபத்தில் கருத்து கணிப்பு எடுத்த போது டிரம்பை விட கமலா ஹாரிஸ் அவர்களுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறியுள்ளது. ஏற்கனவே தொழிலதிபர்கள் போட்டி போட்டுக்கொண்டு கமலா ஹாரிஸ் கட்சிக்கு நிதி வழங்கி வருவதாகவும் ஒரே நாளில் கோடிக்கணக்கில் நிதிகள் குவிந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த முறை டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் போட்டியிட்ட போதே கமலா ஹாரிஸ் தான் அதிபராக வேண்டும் என்று பலர் விரும்பினார்கள், ஆனால் தேர்தல் முடிவுகளில் என்ன நடந்ததோ தெரியவில்லை டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை நாங்கள் ஏமாற மாட்டோம் கமலா ஹாரிஸ் அவர்களை அதிபராக்கியே தீருவோம் என்றும் பல முன்னணி தொழிலதிபர்கள் கூறி வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
எனவே அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளதாகவும் கமலா ஹாரிஸ் இதே ரீதியில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டு சென்றால் அதிபர் ஆவது நிச்சயம் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
Edited by Siva