செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஜூலை 2024 (12:40 IST)

நேபாள விமான விபத்து.! பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு..!!

Nepal Flight
நேபாளத்தில் நடைபெற்ற விமான விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
19 பயணிகளுடன்  காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சௌரியா ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில்,  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து வழுக்கி சென்று தரையில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது விமானத்தில் தீப்பிடித்து எரிந்தது. 
 
அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், முதற்கட்டமாக ஐந்து பேர் பலியானதாக தகவல் வெளியானது.  தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் மேலும் 13 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டும் உயிருடன் உள்ளதாக கூறப்படுகிறது.
 
விமான விபத்து காரணமாக திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதையடுத்து மக்கள் அனைவரும் சம்பவ இடத்தில் கூடி வருகின்றனர்.