திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (13:38 IST)

இந்துக்கள் தான் இதை செய்ததா?? வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி என்ன?

இந்துக்கள் இஸ்லாமிய பெண்களை கொடுமைப்படுத்துவது போல் வெளியான வீடியோவின் உண்மை பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

இஸ்லாமிய மத பெண்கள் மீது சிலர் தண்ணீர் பாய்ச்சுவது போல் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்திருந்த நபர், ”இந்தியாவில் மைனாரிட்டியான முஸ்லீம்களை இவ்வாறு தான் நடத்துகிறார்கள்” என்று மோடி அரசை சாடியிருந்தார்.

தற்போது இந்த வீடியோவின் உண்மை நிலை தெரியவந்துள்ளது. அதாவது இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையில் உள்ள வாந்தாருமூளை கிழக்கு பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது என கூறப்படுகிறது. மேலும் இதற்கும் இந்தியாவைச் சேர்ந்த எந்த மத அமைப்புக்கும் சமபந்தம் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.