"ஆற்றில் தத்தளித்து உயிருக்கு போராடிய நாய்" - ஓடி வந்து காப்பாற்றிய நண்பன் நாய் - வைரல் வீடியோ!
சீனாவில் கிங்யுவான் என்ற ஆற்றில் படகில் தத்தளித்து கொண்டிருந்த நாயை அங்கிருந்த மற்றறொரு நாய் ஓடி வந்து காப்பாற்றும் வீடியோ இன்று இணையத்தில் மெகா வைரலாகி வருகிறது.
சீனாவில் குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில் உள்ள குய்ங்யுவான் (Qingyuan) என்ற ஆற்றில் ஒருவர் தான் வளர்ந்து வந்த குட்டி நாயை படகில் விட்டுவிட்டு மறந்து சென்றுள்ளார். இதனால் ஆற்றின் நீரில் மிதந்துகொண்டிருக்கும் படகில் அந்த நாய் உயிருக்கு போராடி கரையேற முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது.
இதனை அறிந்த அந்த குட்டி நாயின் நண்பனான ராட்வில்லர் வகையை சேர்ந்த மற்றோரு நாய் தன் நண்பன் தண்ணீரில் மிதந்துகொண்டிருப்பதை அறிந்து ஓடி சென்று ஆற்றில் இருந்த படகின் கயிற்றை பிடித்து இழுத்து கரைசேர்த்தது. பின்னர் அந்த குட்டி நாய் கரையிறங்கியதும் துள்ளி குதித்து ஓடியது இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு மெகா வைரலாகி வருகிறது.