1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (15:50 IST)

பெண்ணின் வயிற்றில் 1898 கற்கள் – ஸ்கேன் பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள் !

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவரின் வயிற்றில் சுமார் 1898 கற்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் நாங் காய் மாகாணத்தில் வசித்து வரும் 60 வயது மூதாட்டி ஒருவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவர் வயிறு மற்றும் குடல் பகுதிகளை ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள்க்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது வயிற்றில் 1898 கற்கள் குடல் மற்றும் வயிற்றை அடைத்துக்கொண்டு இருந்துள்ளது. இவற்றை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த கற்கள் எப்படி அவர் வயிற்றினுள் சென்றன என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. அவரே சாப்பிட்டாரா என்பது மயக்கம் தெளிந்து அவரிடம் விசாரணை நடத்தினால்தான் தெரியும்