தன்னை வளர்த்தவருக்காக உயிரை விட்ட நாய் – மனம் நெகிழும் சம்பவம்!

dog
Last Modified வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (13:40 IST)
அமெரிக்காவில் தன்னை வளர்த்த நபர் இறந்த துக்கம் தாளாமல் நாய் ஒன்று உயிரை விட்ட சம்பவம் அப்ப்குதியில் உள்ளவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபொர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ஸ்டூவர் ஹட்சிசன். இவர் பீகிங்கெஸ் ரக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். மிகவும் அன்போடு வளர்த்து வந்த அந்த நாய்க்குட்டிக்கு நீரோ என்று பெயர் வைத்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு ஸ்டூவர்ட்டுக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பல வருடங்களாக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார் ஸ்டூவர்ட். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்டு 11ம் தேதி உயிரிழந்தார் ஸ்டூவர்ட்.

ஸ்டூவர்ட்டின் பிரிவு தாங்க முடியாமல் வாடிய நீரோ சில நாட்களிலேயே உயிரிழந்துவிட்டதாக ஸ்டூவர்ட்டின் தாயார் தெரிவித்துள்ளார். தன்னை வளர்த்தவரோடு நகரமெங்கும் சுற்றி திரிந்த நீரோ இறப்பிலும் அவரை விட்டு பிரியாத இந்த சம்பவம் அந்த பகுதில் உள்ளவர்களை மனம் நெகிழ செய்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :