நீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் .... செம வைரல் வீடியோ

delhi
Last Modified செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (21:00 IST)
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருச்வர் நீச்சல் குளத்தில் இறங்கி நீச்சல் அடித்துள்ளார். இதைப் பார்த்த அவது வளர்ப்பு நாய் ஒன்று, அவர் நீரில் நீந்த முடியாமல் போராடுவதாக எண்ணி அவரது தலை முடியை பிடித்து இழுத்து வரும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
நாம் வீட்டை காவல் காக்கும் விலங்கு நாய். பெரும்பாலான மக்களி செல்ல விலங்காகவும் உள்ளது. மக்கள் எந்தளவு இதன் மீது பாசம் வைத்துள்ளார்களோ.. அதேபோல்  பலமடங்கு வளர்ப்போர் மீது பாசம் வைத்துள்ளது நாய். அதற்கு எத்தனையோ சம்பவங்கள் உள்ளது. 
 
அதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு நீச்சல் குளத்தில் பெண் ஒருவர் நீச்சலிடித்துக்கொண்டிருக்கும் போது, ஜெர்மன் ஷெர்பர்டு  வகையைச் சேர்ந்த நாய் ஒன்று, பெண் நீரில் தத்தளிப்பதாக நினைத்து நீருக்குள் குதித்து அவரது முடியை பிடித்து இழுத்து  அங்குள்ள படியேறும் இடத்தில் அவரை அமரவைத்தது. இந்தக் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட தற்போது இது வைரலாகிவருகிறது. 

 


இதில் மேலும் படிக்கவும் :