ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 நவம்பர் 2022 (18:20 IST)

''போதைப்பொருள் குற்ற வழக்கில் 12 பேருக்கு மரண தண்டனை''...ஐ நா அமைப்பு எதிர்ப்பு

சவூதி அரேபியா நாட்டில் போதைப்பொருட்கள் தொடர்பாக குற்றவழக்கில் தொடர்புடைய 12 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதற்கு ஐ.நா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 

உலகளவில்போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதைத் அந்தந்த நாட்டு அரசுகள் பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

இந்த நிலையில், நமது அண்டை நாடான இலங்கையில் போதைப் பொருட்கள் பயன்படுத்தினால் மரண தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

உலகம் நாகரீகம் அடைந்து, அதன்  உச்சத்தில் இருக்கும் இந்த நவீன காலத்திலும் மரண தண்டனைக்கு எதிராக சமூக ஆர்வலர்களும், மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து குரல் விடுத்து வருகின்றன.

இந்த  நிலையில்,  மத்திய கிழக்கு நாடான, சவூதி அரேபியாவில் முகமது பின் சல்மான் அன் சவுத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது, இங்கு கடந்த 10 நாட்களில், போதைப்பொருட்கள் தொடர்பான குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 12 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஐ நா அமைப்பு எதிர்ப்பு இது வருந்தத்தக்க நிகழ்வு என்று தெரிவித்து,  மரண தண்டனைக்கு தடை விதிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

Edited by Sinoj