தொடர்புடைய செய்திகள்
- மாரி செல்வராஜ் மேல் மரியாதை கூடியுள்ளது… இயக்குனர் நடிகர் ப்ரதீப் ரங்கநாதன்!
- அண்ணாமலை இன்று லண்டன் பயணம்.! வெளிநாட்டிற்கு சென்றாலும், ஆளுங்கட்சியுடன் சண்டை இருக்கும் என பேச்சு..!
- அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடிக்க என்னிடம் ஒரு திரைக்கதை இருக்கு.. அது அவர்களுக்கும் தெரியும் – மனம் திறந்த வெங்கட்பிரபு!
- ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!
- விஜயின் கட்சி கொடிக்கு எதிர்ப்பு.! தேர்தல் ஆணையத்தில் BSP மனு..!!
டெலிகிராம் சி.இ.ஓ. கைதுக்கு இளம்பெண் காரணமா? காதலி போல் நடித்த உளவாளி?
டெலிகிராம் சி.இ.ஓ. கைதுக்கு அவரது காதலி காரணம் என்றும் அவரே உளவாளியாக இருந்து செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பொவல் துரோவ் என்பவர் பிரான்ஸ் போலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் டெலிகிராம் செயலியை முடக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது . மேலும் இந்தியா உள்பட பல நாடுகள் இந்த செயலிக்கு தடை விதிக்க பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜர்பைஜான் நாட்டில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வந்த டெலிகிராம் சி.இ.ஓவை பிரான்ஸ் காவல்துறை கைது செய்த நிலையில், அவர் கைது செய்யப்பட்ட போது அவருடன் ஜூலி பாவிலோவா என்ற இளம் பெண்ணும் இருந்ததாக தெரிகிறது. இவர் பாவெல் துரோவின் காதலி என்று கூறப்படும் நிலையில் தற்போது அவர் எங்கே இருக்கிறார்? என்ன ஆனார் என்று தெரியவில்லை.
ஆனால் ஜூலி பாவிலோவாவும் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அவர் காதலி போல் நடித்து உளவாளி வேலை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. எனவே டெலிகிராம் சிஇஓ கைதுக்கு அவரும் ஒரு காரணம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் எல்லைக்குள் வருவதை அவரது காதலி ஜூலி பாவிலோவா தான் உறுதி செய்ததாகவும் அதன் பின்னரே அவரை குறிவைத்து பிரான்ஸ் போலீசார் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
