திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (15:33 IST)

பெண் டாக்டரை சரமாரியாக தாக்கிய நோயாளி.. மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவ மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆந்திராவில் பெண் டாக்டர் ஒருவரை நோயாளி சரமாரியாக தாக்கியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழகத்தில் பணிபுரியும் பெண் மருத்துவரை அதே மருத்துவமனையில் நோயாளியாக இருந்த ஒருவர் சரமாரியாக தாக்கி உள்ளார். பெண் டாக்டரின் தலைமுடியை பிடித்து அவர் தாக்கிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து அங்கிருந்த சக மருத்துவர்கள் நர்சுகள் பெண் டாக்டரை காப்பாற்றி அந்த நோயாளி மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட டாக்டர் மருத்துவ அறிவியல் கழக துணைவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் இந்த மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் உடனடியாக கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.  இந்த சம்பவம் அந்த மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran