1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (12:52 IST)

109 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்திய சூழல்பந்து வீச்சாளர்கள் என்ன செய்ய காத்திருக்கிறார்கள்?

aus bowl
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இந்தூரில் தற்போது மூன்றாவது கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும் சுப்மன்கில் 21 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா அணியின் மாத்யூ 5 விக்கெட்டுக்களையும், நாதன் லயன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர். 
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிசை விளையாட உள்ள நிலையில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் என்ன செய்ய காத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் மற்றும் ஜடேஜா பந்துவீச்சில் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran