வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (14:24 IST)

ஆஸ்திரேலியா அபார பேட்டிங்.. விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் இந்திய பவுலர்கள்..!

ashwin
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று முதல் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் சுழற் பந்துவீச்சாளர்கள் மிக அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதனை அடுத்து தற்போது ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஜடேஜா மட்டும் ஒரு விக்கெட் எடுத்து உள்ள நிலையில் அஸ்வின் இதுவரை 9 ஓவர்கள் வீசியும் விக்கெட் எடுக்கவில்லை 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் காவாஜா 33 ரன்கள் எடுத்தும், லாபிசாஞ்சே 16 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலியா அணி தற்போது 38 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருக்கும் நிலையில் முதல் இன்னிங்ஸில் அந்த அணி அதிக ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்திய பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே இந்த  டெஸ்டில் வெற்றி பெற முடியுமே என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran