1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:44 IST)

உக்ரைனுக்கு ஸ்வீடன் செய்த ராணுவ உதவி: போர் நீட்டிகுமா? நிற்குமா?

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
உக்ரைன் ராணுவம் திருப்பித் தாக்காமல் இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற என்று ரஷ்ய வெளியே துறை அமைச்சர் தெரிவித்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு நாங்களும் தயார் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் ஸ்வீடன் நாடு உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக உதவி செய்ய முன்வந்துள்ளது. அதுமட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியாகவும் உக்ரைன் நாட்டுக்கு ஸ்வீடன் அரசு உதவி செய்ய இருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்
 
மேலும் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக உலக நாடுகளை திரட்டி ஒரு புதிய கூட்டணியை அமைப்போம் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளதால் போர் நிற்குமா? தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.