திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜூலை 2022 (20:51 IST)

கோத்தபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார்: சபாநாயகர்

kothapaya
இலங்கை அதிபர் கோத்தபய இலங்கையில் தான் இருக்கிறார் என்றும் அவர் வெளிநாட்டுக்கு செல்லவில்லை என்றும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 மக்கள் போராட்டம் காரணமாக இலங்கை அதிபர் மாளிகை சமீபத்தில் முற்றுகையிட்டதை அடுத்து உயிர் தப்பிக்க இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே இலங்கையிலிருந்து வெளியேறி விட்டதாகவும் கப்பல் மூலம் அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறப்பட்டது
 
ஆனால் இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா  என்பவர் இதனை மறுத்துள்ளார் கோத்தபய இலங்கையில் இருந்து வெளியேறியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் அவர் இன்னும் இலங்கையில்  தான் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.