1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்: சோனியா காந்தி

sonia
நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 
 
இலங்கையில் தற்போது பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நிலையில் அந்நாட்டு மக்கள் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஷ பதவி விலகி தலைமறைவாகிவிட்டார். அவரது மகன் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவும் நேற்று முன்தினம் திடீரென தலைமறைவாகி விட்டார். போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இலங்கையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவ வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.