திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (15:02 IST)

அரசை விமர்சித்த அமைச்சரை பதவி நீக்கம் செய்த இலங்கை அதிபர்!

இலங்கையில் கொரோனாவுக்கு பிறகான பொருளாதாரம் அதலபாதாளத்தில் கிடக்கிறது. இதனால் அந்நாட்டில் விரைவில் உணவுப்பஞ்சம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

சுற்றுலாவை மிகப்பெரிய அளவில் நம்பியிருந்த இலங்கை கொரோனாவுக்கு பிறகு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. மேலும் அந்நாட்டு அரசு இயற்கை உரங்களையே முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கை முடிவால் கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்பட்டு பணவீக்கம் அதிகரித்தது. மேலும் விலைவாசியும் கடுமையான ஏற்றம் கண்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடிகளால் இலங்கை அரசு திவாலாக வாய்ப்புள்ளதாகவும், அதனால் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே பதவி விலக உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை பிரதமர் அலுவலகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

இந்நிலையில் அரசின் தவறான விவசாயக் கொள்கைகளால் நாட்டில் உணவுப் பஞ்சம் வரலாம் என்று பேசிய அந்நாட்டின் மத்திய அமைச்சர் சுஷில் பிரேமஜயந்தவை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிநீக்கம் செய்துள்ளார். இது அந்த நாட்டின் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.