திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (10:40 IST)

சூரத்தில் மில்லில் ஏற்பட்ட வாயுக்கசிவு… 6 பேர் பலி!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் உள்ள மில்லில் வாயுக்கசிவு ஏற்பட்டு 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் உள்ள பேப்பர் மில்லில் வேதியல் கழிவுகளை வெளியேற்றும் போது அதில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக் கசிவால் 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.