1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (10:21 IST)

பொங்கலுக்கு வெளியாகிறது புத்தம் புது காலை சீசன் 2!

புத்தம் புது காலை ஆந்தாலஜியின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாம்.

கொரோனா முதல் லாக்டவுன் போது நம்பிக்கையை விதைக்கும் விதமாக சில குறும்படங்கள் இணைந்த ஆந்தாலஜியாக புத்தம் புது காலை அமேசான் ப்ரைமில் ரிலிஸ் ஆனது. இதில் உள்ள படங்களை கார்த்திக் சுப்பராஜ், சுஹாசினி, ராஜீவ் மேனன் மற்றும் சுதா கொங்கரா உள்ளிட்டோர் இயக்கி இருந்தனர்.

இந்த படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் இப்போது இதன் அடுத்த சீசன் உருவாகி உள்ளது. ஐந்து படங்களின் படப்பிடிப்பு மற்றும் இதரப் பணிகள் முடிந்து இப்போது அமேசான் ப்ரைம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். இதில் உள்ள ஐந்து படங்களையும் ஹலிதா ஷமிம், பாலாஜி மோகன், மதுமிதா ஆகியோர்களுடன் இணைந்து புதுமுக இயக்குனர்களான ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்யகிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனராம். விரைவில் இந்த ஆந்தாலஜி அமேசானில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த ஆந்தாலஜி ரிலிஸாக உள்ளதாகவும், அதற்கான வேலைகளில் இப்போது படக்குழு இறங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.