1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (08:30 IST)

ஹைதி தீவை அழித்த நிலநடுக்கம்; 1,297 பேர் பலி! – உலக நாடுகள் அஞ்சலி!

கரீபியன் கடல் தீவான ஹைதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரீபியன் தீவு கூட்டத்தில் முக்கியமான தீவு நாடான ஹைதியில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஹைதியின் லெஸ் கெயஸ் நகரம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இதுவரை நிலநடுக்கத்தால் 1,297 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் பலரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஹைதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஹைதி நாட்டில் நடந்த இந்த சோக சம்பவத்திற்கு உலக நாடுகள் பல அஞ்சலி செலுத்தி வருகின்றன.