1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (09:40 IST)

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்! – வெடித்து சிதறிய ராக்கெட்!

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப ஸ்பேஸெக்ஸ் தயாரித்து வரும் ராக்கெட் வெடித்து சிதறியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

அமெரிக்காவில் விண்வெளி ஆய்வில் நாசாவுடன் இணைந்து பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ராக்கெட் மூலம் விண்வெளி வீரர்களை அழைத்து சென்றது.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்து செல்லும் அடுத்தக்கட்ட திட்டத்திற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. இதற்காக ஸ்டார்ஷிப் என்ற விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 60 அடி உயரம் கொண்ட இந்த விண்கலத்தை ஏவும் பரிசோதனை நேற்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடைபெற்றது. ஏவும்போது எந்த சிக்கலும் இல்லாமல் புறப்பட்ட விண்கலம் மீண்டும் தரையிரங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் வெடித்து சிதறியது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அது ஆளில்லா சோதனை விண்கலம்தான் என்பது ஆறுதலை அளித்துள்ளது.