திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (10:39 IST)

ஜோ பைடன் மருத்துவ குழுவில் மற்றுமொரு இந்திய வம்சாவளி! – அமெரிக்காவை நிர்வகிக்கும் இந்தியர்கள்!

அமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவரது அவையில் தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் இடம்பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஜனநாயக கட்சியின் சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் அவர் வெற்றிபெற வேண்டும் என தமிழகத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் கூட வேண்டுதல்கள், பூஜைகள் நடந்தன

தொடர்ந்து கொரொனா தடுப்பு குழுவில் இடம்பெற்ற இந்திய வம்சாவளியான செலின் கவுண்டர் உள்ளிட்டோரும் ட்ரெண்டான நிலையில், தற்போது ஜோ பிடனின் மருத்துவ குழு சர்ஜன் ஜெனரலாக இந்திய வம்சாவளியான மருத்துவர் விவேக் மூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மிக முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினர் இடம்பெறுவது இந்தியாவை பெருமை கொள்ள செய்துள்ளதாக பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.