தொடர்புடைய செய்திகள்
- 7 கோடியை நெருங்கிய உலக கொரோனா பாதிப்பு!
- 30 வருஷத்துல பனிப்பாறைகளே இல்லாம போயிடும்! – ஆபத்தான நிலையில் ஆர்க்டிக்!
- ஜோ பைடன் மருத்துவ குழுவில் மற்றுமொரு இந்திய வம்சாவளி! – அமெரிக்காவை நிர்வகிக்கும் இந்தியர்கள்!
- இன்றைய உலக கொரோனா நிலவரம்: பாதிப்பு 6.85 கோடி, பலி 15.62 கோடி
- கொரோனா தடுப்பூசி: பிரிட்டன் மூதாட்டிக்கு கிடைத்த உலகின் முதல் ஃபைசர் தடுப்பூசி
பூமிக்கு வந்த ஏலியன்கள்? உண்மையை மறைத்த ட்ரம்ப்! – பகீர் கிளப்பும் இஸ்ரேல் விஞ்ஞானி!
ஏலியன்கள் பூமியில் உள்ளவர்களோடு தொடர்பில் இருப்பதாக இஸ்ரேல் முன்னாள் விண்வெளி பாதுகாப்பு இயக்குனர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் ஏலியன்கள், வேற்றுக்கிரக வாசிகள் குறித்த கற்பனைகளும், விவாதங்களும் காலம் காலமாகவே இருந்து வருகின்றன. இதுகுறித்த படங்கள், கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சதி கோட்பாட்டாளர்கள் ஏலியன்கள் இருப்பதாக பல காலமாகவே பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் ஏலியன்கள் இருப்பது உண்மை என இஸ்ரேல் முன்னாள் விண்வெளி பாதுகாப்பு இயக்குனர் ஹெய்ம் எசெட் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏலியன்களோடு தொடர்பு கொள்ள ”கேலக்டின் பெடரேஷன்” இருப்பதாகவும், செவ்வாய் கிரகத்தில் சுரங்கம் அமைத்து இயங்கும் அதில் பல்வேறு ரகசிய விஷயங்கள் நடப்பதாகவும் கூறியுள்ள அவர், இந்த விஷயம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் தெரியும் என குண்டை தூக்கி போட்டுள்ளார்.
ஹெய்ம் எசெட் இவ்வாறு திடீரென ஏலியன் குறித்து பகிரங்கமாக பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
