30 வருஷத்துல பனிப்பாறைகளே இல்லாம போயிடும்! – ஆபத்தான நிலையில் ஆர்க்டிக்!
உலக வெப்பமயமாதல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஆர்க்டிக் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலகின் பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. இதுகுறித்து ஒருசில நாடுகள் குரல் கொடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தொடங்கியுள்ள போதிலும் பரவலாக இதுகுறித்த புரிதல் மக்களிடம் ஏற்படாமல் உள்ளது.
இந்நிலையில் ஆண்டுதோறும் உருகி வரும் ஆர்க்டிக் பனிப்பாறைகளின் உறையும் வீதம் குறைந்து வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆண்டுதோறும் ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் கோடைக்காலங்களில் உருகுகின்றன. பின்னர் குளிர்காலங்களில் மீண்டும் தண்ணீர் உருகி பனிப்பாறையாக மாறுகின்றன.
ஆனால் சமீப காலமாக பனிப்பாறைகள் உறைவதை விட உருகுவது அதிகமாகி உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிலை நீடித்தால் அடுத்த 30 ஆண்டுகளில் ஆர்க்டிக் கடல் பகுதியில் உள்ள மொத்த பனிப்பாறைகளும் உறுகி விடும் என்றும், 2050ல் ஆர்க்டிக் பெருங்கடலில் பனிப்பாறைகளே இருக்காது என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனால் கடல்நீர் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.