1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2024 (14:47 IST)

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

Phone

ஸ்பெயினில் பார்ன் படங்களை சிறுவர்கள் பார்ப்பதை தடை செய்யும் வகையில் புதிய பாஸ்போர்ட் முறையை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

உலக நாடுகள் முழுவதும் பார்ன் எனப்படும் ஆபாசப்படங்களை பார்க்கும் பழக்கம் இளைஞர்கள் தொடங்கி பல வயது நபர்களிடையேயும் அதிகரித்துள்ளது. பல நாடுகளில் 18 வயதிற்கு குறைவான சிறுவர்களிடையேயும் இந்த பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த பல நாடுகளும் மிகவும் திணறி வருகின்றன.

இந்நிலையில் 18 வயதிற்கு குறைவானவர்கள் பார்ன் பார்ப்பதை தடுக்கவும், அதிகமாக பார்ன் பார்ப்பதை கட்டுப்படுத்தும் விதமாகவும் பாஸ்போர்ட் முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது ஸ்பெயின் அரசு. இந்த பாஸ்போர்ட் முறையில் செல்போனில் குறிப்பிட்ட ஸ்பெயின் அரசின் பாஸ்போர்ட் ஆப்பை தரவிறக்கி அதில் அரசு அடையாள அட்டையை கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
 

அவ்வாறு பதிவு செய்த 18+ வயதினர் மட்டுமே பார்ன் தளங்களை தங்கள் செல்போன், கணினியில் அணுக முடியும். மேலும் அவ்வாறு அணுகுபவர்களுக்கும் மாதம்தோறும் 30 கிரெடிட்டுகள் மட்டுமே வழங்கப்படும். இந்த கிரெடிட்டுகளை பயன்படுத்தி பார்ன் வீடியோக்களை பார்க்க முடியும். இந்த புதிய நடைமுறையால் சிறுவர்கள் ஆபாச வீடியோக்களை பார்ப்பதை தடுப்பதுடன், இளைஞர்களிடையே ஆபாச வீடியோ மோகத்தை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K