பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஸ்பெயின் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: ஜார்கண்ட் அரசு
ஜார்கண்ட் மாநிலத்தில் சுற்றுலா வந்த ஸ்பெயின் பெண் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு ரூபாய் 10 லட்சம் ஜார்கண்ட் மாநில அரசு இழப்பீடு தொகையாக கொடுத்துள்ளது
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் மற்றும் அவருடைய பிரேசில் நாட்டைச் சேர்ந்த கணவர் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இடத்தில், ஸ்பெயின் பெண் மர்ம நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்
இதனை அடுத்து காவல்துறை இது குறித்து விசாரணை செய்து மூன்று நபர்களை கைது செய்திருப்பதாகவும் இன்னும் சிலரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்த நிலையில் ஜார்கண்ட் மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது
மேலும் விரைவில் நீதி நிலைமாற்றப்படும் என்று அந்த பெண்ணிடன் கணவரிடம் போலீசார் உறுதி அளித்தனர். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஸ்பெயின் பெண்ணுக்கு இழப்பீடாக ஜார்கண்ட் மாநில காவல்துறை 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Edited by Siva