1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2024 (14:13 IST)

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

Indian Rupees

மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் சாலையில் ஏராளமான 500 ரூபாய் தாள்கள் கிடந்த நிலையில் மக்கள் அதை அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரையில் உசிலம்பட்டியிலிருந்து தேனி செல்லும் சாலையில் மாமரத்துப்பட்டி அருகே சென்ற வாகனத்திலிருந்து ஏராளமான 500 ரூபாய் நோட்டுகள் சிதறி சாலையெங்கும் கிடந்துள்ளது.

 இதை பார்த்த மக்கள் பலர் ஓடி சென்று ரூபாய் நோட்டுகளை அள்ளத் தொடங்கியுள்ளனர். இந்த செய்தி உசிலம்பட்டி வரை பரவி பலரும் ரூபாய் நோட்டுகளை எடுக்க மாமரத்துப்பட்டிக்கு படையெடுத்துள்ளனர். ஆனால் அதற்குள் அங்கிருந்த பலர் ரூபாய் நோட்டுகளை அள்ளிச் சென்றதால் பின்னால் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அப்பகுதிக்கு விரைந்து ரூபாய் நோட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் ரூ.3 லட்சம் அளவிலான ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்ததாக கூறப்படுகிறது. அந்த ரூபாய் நோட்டுகளை காணவில்லை என தொலைத்தவர்கள் யாரும் புகார் அளிக்காததாலும், யார் யார் அந்த ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர் என்பதை போலீஸார் கண்டுபிடித்து பணத்தை திரும்ப பெறுவதில் சிக்கல் உள்ளதாலும் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K