செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 20 மே 2024 (15:25 IST)

இரவில் பகலை காட்டிய அதிசயமான விண்கல்! வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்! – வைரலாகும் வீடியோ!

Meteorite
ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளை கடந்து சென்ற அதி பிரகாசமான விண்கல் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.



பூமிக்கு வெளியே விண்வெளியில் ஏராளமான கோள்களும், விண்மீன்களும், விண்கற்களும் உள்ளன. பிரபஞ்சம் முழுவதுமே சிறியது முதல் எவரெஸ்ட்டை விட பெரிய சைஸிலான விண்கற்கள் கூட சர்வசாதரணமாக சுற்றி வருகின்றனர். சூரிய குடும்பத்தை தாண்டி சென்றால் உள்ள இண்டெஸ்டெல்லார் பெல்ட் என்பது இப்படியான விண்கற்களால் உருவான ஒரு மாபெரும் வளையம்தான்.

பூமியை நாள்தோறு ஏகப்பட்ட விண்கற்கள் தாண்டி செல்கின்றன. அப்படி செல்லும் சில விண்கற்கள் புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, பூமியின் காற்று மண்டலத்திற்கு நுழைகையில் பற்றி எரியத் தொடங்குகிறது. பின்னர் எரிநட்சத்திரமாக வானில் பிரகாசித்தப்படி சென்று பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் விழுகிறது.


நேற்று அவ்வாறாக மிகவும் ஒளியுடன் கூடிய பெரிய எரிநட்சத்திரம் ஒன்று போர்ச்சுக்கல், ஸ்பெயின் என இரண்டு நாடுகளையுமே கடந்து சென்றுள்ளது. அது கடந்து சென்றபோது வீசிய வெளிச்சத்தில் இரவு பொழுதும் பகலாக மாறியது. மக்கள் அதை வாய்பிளந்து பார்த்தபோது சிலர் தங்களது செல்போன்களிலும் அதை படம் பிடித்துள்ளனர். அந்த விண்கல் அட்லாண்டிக் கடலில் சென்று விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் மிகுந்த ஒளியுடன் அந்த எரிநட்சத்திரம் தாண்டி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K