ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (22:01 IST)

விண்வெளி நிலையத்தில் இருந்து நாசா வீரர்களுடன் பூமிக்கு திரும்பிய விண்கலம்

உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்திற்கு 4 வீரர்களுடன் சென்றது.

இந்த விண்வெளி மையத்தில், 4 வீரர்களும்  6 மாத காலம் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தனர்.  இந்த நிலையில் ஆய்வுப் பணி முடிந்து 4 வீரர்கள் பயணித்த விண்கலம்  நேற்று  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் கடலில் தரையிறங்கியது.

விண்வெளி  மையத்தில் இருந்து புறப்பட்ட சுமார் 5 மணி நேரத்திற்குப் பின் புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள கடலில் பாராசூட்டின் மூலம் இறங்கியது.

இந்த நிலையில் தற்போது விண்வெளி மையத்தில், 3 அமெரிக்க வீரர்களும், 3 ரஷியர்களும்,  1 ஜப்பானியர் என 7 பேர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

Edited by Sinoj